திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார்..!

அரசியல்

திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார்..!

திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார்..!

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் தி.மு.க நிர்வாகி பிரசன்னா மீதும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு பேசிய எம்பி தயாநிதிமாறன் மீதும் நடவடிக்கை எடுக்க பாப்பிரெட்டிப்பட்டி, காவல் நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பாஜக கிழக்கு ஒன்றிய பொருளாளர் நம்பிராஜன் என்பவர் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பது:- மேற்கண்ட பிரசன்னா என்கிற நபர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த 12-05 2020 தேதிகளில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மக்களிடையே உரையாற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கீழ்த்தரமான கொச்சையான வார்த்தைகளால் அவதூறு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

மேற்படி பதிவானது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மீது பச்சையான அவதூறு பரப்ப வேண்டும் என்கிற நோக்கத்தோடு மக்களிடையே இந்த தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் அவ்வாறு வெறுப்புணர்வை தூண்டி அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீற செய்யும் வகையிலும் அவ்வாறு அவதூறுகளை பரப்பி தேசப்பற்றாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் தூண்டி சினமூட்டி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்க நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டுள்ளது. மேலும் தேசப்பற்றாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை புண்படுத்தும் நோக்கத்திலும் செயல்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட நபர் மீது உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து காவல்துறையின் சிறப்பையும் சீரிய செயல் பாட்டையும் உறுதி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீது அளிக்கப்பட்ட புகாரில் :-

மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்
அவர்கள் 15/05/2020 பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்கள்? என்று கூறி பட்டியல் இன மக்களை அவமானப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக புலம்பும் அவர்களுக்கு உரிய விளக்கத்தை தலைமை செயலாளர் அவர்கள் அளித்துள்ள நிலையில், தயாநிதி மாறன் அவர்களின் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தி உள்ளது , தலைகுனிய வைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருப்பது சட்டப்படி குற்றம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காகவும் , அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தருவதற்காகவும் தான் வன்கொடுமை சட்டம் இயற்றப்பட்டது என்பதை காவல்துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களை மரியாதை இல்லாது பேசுவதற்கு தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும், பட்டியலின சமுதாயம் மூன்றாம் தர குடிமக்கள் தான் என்ற வன்மத்தோடு, ஜாதிய சிந்தனையோடு தான் தயாநிதி மாறன் பேசியுள்ளார் என்பதை அவர் பேச்சு தெளிவாக உணர்த்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி உள்ள மக்களவை உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் மீது காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நம்பிராஜன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், சின்னசாமி, மோடி மனோகரன், சுரேஷ், ஆறுமுகம், மணிபாரதி உடன் இருந்தனர்.!

Leave your comments here...