சென்னை பல்கலைக்கழகத்தில் தொடரும் இந்து விரோதப் போக்கு – ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்..!

தமிழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடரும் இந்து விரோதப் போக்கு – ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்..!

சென்னை பல்கலைக்கழகத்தில்  தொடரும் இந்து விரோதப் போக்கு – ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்..!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடரும் இந்து தமிழர் விரோதப் போக்கு – ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்ட உள்ள அறிக்கையில்:- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள Department of Christian Studies அமெரிக்காவில் உள்ள ஏலன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வருகின்ற ஜூலை 21-24 தேதிகளில் இந்திய மதங்களின் நம்பிக்கைகள், ஆலயங்கள், மத பழக்க வழக்கங்கள் குறித்து விவாதமாம். இதற்கு சிவகங்கை மாவட்ட கிறித்தவ டயோசிஸை சேர்ந்த மதமாற்றத்தை தனது முழு நேரப் பணியாகக் கொண்டுள்ள ஜேம்ஸ் பொன்னையா ஒருங்கிணைப்பாளர்.

இவர்கள் இந்திய மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அழைப்பிதழிலேயே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு அந்நிய மதத்தினர் எப்படி இந்திய மதங்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஆலயங்கள் பற்றி விவாதிப்பது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் சென்னை பல்கலைக்கழகத்தில் எப்படி அனுமதிப்பது. அப்படியானால் சென்னை பல்கலைக்கழகத்தில் கிறித்தவ மதம் குறித்த நம்பிக்கைகள் (ஏசுநாதர் அவதாரம் முதல் 16 முறை கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்ற்ச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் ஃபாதர் ஃபிராங்களின் வரை விவாதிக்க கட்டுரைகள் சமர்ப்பிக்க பல்கலைகழகம் அனுமதிக்குமா

ஏற்கனவே இதேபோன்ற தீய செயலுக்கு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் திட்டமிடப்பட்டது. இந்திய மதங்களை இழிவு படுத்தி மதமாற்ற வியாபாரத்தின் ஒரு அங்கமே இந்த திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி. இதை ரத்துச் செய்ய தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உடனடியாக உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்

இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் கூறியிருப்பது:- சென்னை பல்கலைகழகம் Department of Christian Studies ஜூலை 21-24 தேதிகளில் இந்திய மதங்களின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் ஆலயங்கள் பற்றி விவாதிப்பது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் கிறித்தவ மத நம்பிக்கைகள் சர்ச்சில் நடப்பவை பற்றி விவாதிக்க இந்துக்ளை அனுமதிக்க வேண்டும்.

Leave your comments here...