கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் அளிக்க களம் இறக்கப்பட்ட ரோபோக்கள்..! எங்கே தெரியுமா…?

தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் அளிக்க களம் இறக்கப்பட்ட ரோபோக்கள்..! எங்கே தெரியுமா…?

கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் அளிக்க களம் இறக்கப்பட்ட ரோபோக்கள்..! எங்கே தெரியுமா…?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகளுடன் தான் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் ரோபோவை வடிவமைத்தது. இந்த ரோபோக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் சுமார் 15 ரோபோக்கள் தயார்படுத்தப்பட்டது. திருச்சியை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 15 பேர் கொண்ட குழு ஒன்று தொற்று பாதிக்கப்பட்ட காலத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகளிடமிருந்து மருத்துவர்களும், செவிலியர்களும் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இந்த ரோபோக்கள் மருந்து மாத்திரைகளை நோயாளிகளிடம் கொண்டு சென்று கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த ரோபோவிற்கு ZAFI ROBO என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் வைத்திருக்கும் ஸ்கீரின் வழியாக மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளிடம் நேரிடையாக குறைகளை காணொலி மூலம் கேட்டறிந்து அதற்கேற்ப மருந்து மாத்திரைகளை கொடுத்துதவ பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.2 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டதாகும். ஏற்கெனவே தஞ்சை, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகளை வழங்கிட 3 ரோபோக்களை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் சார்பில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , முன்னிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையர் பத்ரிநாத் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து இயந்திரங்களின் செயல்பாடு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் ஜெ.சங்குமணி, பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Leave your comments here...