பிரதமர் மோடி குறித்து முகநூலில் அவதூறு : திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் பாஜக புகார்…!

அரசியல்

பிரதமர் மோடி குறித்து முகநூலில் அவதூறு : திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் பாஜக புகார்…!

பிரதமர் மோடி குறித்து முகநூலில் அவதூறு : திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் பாஜக புகார்…!

மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வந்த போதிலும், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகளும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. என்றாலும் வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி {மே-12} இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5-வது தடவை ஆகும். அப்போது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்பதை தெரிவித்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் பிரதமர் மோடி குறித்து கொரோனா Vs மோடி என்ற தலைப்பில் தனது முகநூலில் பதிவு செய்து உள்ளார்.

இதனை குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கண்டித்து வருகிறார்கள். இது குறித்து எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது பா.ஜ.க மாநில வழக்கறிஞர் அணி செயலாளரும்,குமரி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார் நடவடிக்கை எடுக்ககோரி குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்து உள்ள அந்த புகாரில் :- பாரத பிரதமர் மோடி அவர்களின் நற்பெயருக்கும் புகழக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் 12.5.2020 இரவு 9 மணிக்கு தனது முகநூலில் பக்கத்தில் கொரோனா வைரசையும் மோடி அவர்களையும் ஒப்பிட்டு கார்டூன் போட்டு ‘ கோ பேக் மோடி’ நாட்டை அழிக்கும் வைரஸ் என பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த லட்சக்கணக்கான பொதுமக்களும் எங்களை போன்ற கட்சிகார்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொது மக்கள் மத்தியில் பாரத பிரதமரின் நற்பெயருக்கு அவமரியாதை ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே வேண்டுமென்று திட்டமிட்டு முகநூலில் பதிவு செய்து பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பிய மேற்ப்படி பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்கள்.

இந்த புகாரின் போது கோட்டபொறுப்பாளர் கிருஷ்ணன்,குளச்சல் நகர் பா.ஜ.க தலைவர் கணேசன்,பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தக்கலை தெற்கு ஒன்றிய பா.ஜ.க பொதுச்செயலாளராகிய பத்பகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave your comments here...