20 லட்சம் கோடி – என்னென்ன திட்டங்கள் ? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

இந்தியா

20 லட்சம் கோடி – என்னென்ன திட்டங்கள் ? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

20 லட்சம் கோடி – என்னென்ன திட்டங்கள் ?  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கு மே 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது மே 18ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகை நாட்டின் ஜிபிடி மதிப்பில் 10% ஆகும்.இருப்பினும் திட்டங்களின் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. திட்டங்களின் விவரங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிப்பு வெளியாகியது.

அதன்படி, அவர் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்:- அப்போது அவர்கூறும்போது “தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். சுயச்சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.

பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்; ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். சிறப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசு ஆலோசனை நடத்தியது; தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்படுகிறது.


தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்; மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

சுயசார்பு பாரதம்” என்ற தலைப்பில் தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.உள்ளூர் சந்தைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களே பின்னாளில் பெருநிறுவனங்களாக மாறியதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது.

உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம். ஜன்தன், ஆதார் மூலம், பயனாளிகளுக்கு நிவாரணம் நேரிடையாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மின்சாரத்துறை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், மின்மிகை நாடாக இந்தியா மாறும் நிலை உருவாகியுள்ளது. தற்சார்பு நாடாக இந்தியாவை மாற்றுவதே, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும்.சுயசார்பு பாரதம்” என்பது உலக நாடுகளில் இருந்து, இந்தியா தனிமைப்படுத்திக் கொள்வதாக கருதக் கூடாது.

மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்.


அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்.வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.

ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.


குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதிக்குள், நிதி திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும், 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்.இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்


ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்.

சிறு-குறு, நடுத்தர நிறுனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். ரூ.100 கோடி வரை விற்று-முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறும்.வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீடிக்கப்படும் என கூறினார்.

Leave your comments here...