தஞ்சை நெட்டி மாலைகள் மற்றும் அரும்பாவூர் மரச்சிற்ப வேலைகளுக்கு புவிசார் குறியீடு

தமிழகம்

தஞ்சை நெட்டி மாலைகள் மற்றும் அரும்பாவூர் மரச்சிற்ப வேலைகளுக்கு புவிசார் குறியீடு

தஞ்சை நெட்டி மாலைகள் மற்றும் அரும்பாவூர் மரச்சிற்ப வேலைகளுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத்தட்டு, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்து

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நெட்டி தாவரத்தை பதப்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தஞ்சை பெரியகோவில், சாமி சிலைகள், மாலைகள், தோரணங்கள், கலைநயமிக்க பொருட்கள் போன்றவைகளை கைவினைக் கலைஞர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கின்றனர்.

அதேபோன்று, அரும்பாவூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து பொம்மைகள், தேர்கள் மற்றும் விதவிதமான சிற்பங்களை உருவாக்குகின்றனர். தமிழக கலைஞர்களின் கைவண்ணத்தில் செதுக்கப்படும் இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கோரி தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

தஞ்சையில் செய்யப்படும் நெட்டி மாலை மற்றும் வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

Leave your comments here...