ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

இந்தியா

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி  உள்பட 4 பயங்கரவாதிகள்  சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதியாக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த ரியாஸ் நைகூவின் தலைக்கு ரூ.12 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரனது சொந்த கிராமத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவருடன் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதிகளின் அடையாளம் தெரியவரவில்லை. ஏற்கனவே மூன்று முறை நைக்கூவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தபோதும், அவர் தப்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், புல்வாமா மாவட்டத்தின் மற்றொரு கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்லிடப்பேசி இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...