இதிலும் சாதனையா..! திறந்த 2 நாளில் 197 கோடி கோடி ரூபாய்க்கு மது விற்பனை..! எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியா

இதிலும் சாதனையா..! திறந்த 2 நாளில் 197 கோடி கோடி ரூபாய்க்கு மது விற்பனை..! எந்த மாநிலம் தெரியுமா..?

இதிலும் சாதனையா..! திறந்த 2 நாளில் 197 கோடி கோடி ரூபாய்க்கு மது விற்பனை..! எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஊரடங்கில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. விதிமுறை இப்படி இருந்தாலும் இந்தியாவில் சில மாநிலங்களில் சிவப்பு மண்டலத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு சிவப்பு மண்டலத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு நீண்ட வரிசையில் முக கவசங்களை அணிந்தபடி, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி, மதுபானங்களை வாங்கி பைகளில் போட்டு கொண்டு சென்றதை காண முடிந்தது. அங்கு நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்றும் விற்பனை சூடு பிடித்தது. இதுபற்றி கலால் துறை உயரதிகாரிகள் கூறும்பொழுது, ‘இந்தியாவில் தயாரான மதுபானம் 36.37 லட்சம் லிட்டர் அளவில் 4.21 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதனால் ரூ.182 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.இதேபோன்று 7.02 லட்சம் லிட்டர் அளவிலான பீர் 90 ஆயிரம் பெட்டிகள் வரை விற்று தீர்ந்துள்ளன.

இதனால் ரூ.15 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்து உள்ளது’ என தெரிவித்து உள்ளனர்.‘முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மது விற்பனையில் சாதனை படைத்து உள்ளது’ என பெயர் வெளியிட விருப்பமில்லாத அதிகாரியொருவர் தெரிவித்து உள்ளார். இதனால் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வின் 2வது நாளில் ரூ.197 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

Leave your comments here...