கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க – பள்ளிவாசல், தேவாலயங்கள் அளிக்க முன் வர வேண்டும் : விஎம்எஸ்.முஸ்தபா வேண்டுகோள்..!!

தமிழகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க – பள்ளிவாசல், தேவாலயங்கள் அளிக்க முன் வர வேண்டும் : விஎம்எஸ்.முஸ்தபா வேண்டுகோள்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க – பள்ளிவாசல், தேவாலயங்கள் அளிக்க முன் வர வேண்டும் : விஎம்எஸ்.முஸ்தபா வேண்டுகோள்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க – பள்ளிவாசல், தேவாலயங்கள் அளிக்க முன் வர வேண்டும் என நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்து உள்ளார்

இது குறித்து நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலகட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , அதற்கான போதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவல் ஏற்பட தொடங்கியது. பின்னர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் பரிசோதனைகள் சற்று அதிகப்படுத்தபட்டன. ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 6000 மாதிரிகள் செய்யப்பட்டன. பின்னர் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாளொன்றுக்கு 8000-9000 வரை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்முறையாக தமிழகத்தில் 10000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,39,490 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் மே 2ம் தேதி 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமான மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அளவில், இதுவரை 9.02 லட்சம் மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தின் பரிசோதனை சதவீதம் மட்டும் 14 சதவீதம் ஆகும். இந்திய அளவில் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் பேரில் 165 பேருக்கும், சென்னை மாநகராட்சி பகுதியில் 1 லட்சம் பேரில், 480 பேருக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அதிகப்படியான கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் பள்ளிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களை ஒப்படைக்கவும் சென்னை மாநகராட்சி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இடம் கிடைக்காமல் தமிழக அரசு தற்போது திணறி வருகிறது.

அரசு உதவும் வகையில் பள்ளிவாசல்கள், தேவாலயங்களின் இடங்களை அதன் நிர்வாகிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். 2015-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரு வெளத்தால் லட்சகணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்த போது, பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் மட்டும் கொரோனாவிற்கு மதசாயம் பூசப்பட்ட போதிலும், கிசிச்சை அளிக்க பள்ளிவாசல்களை ஜமத்தார்கள் தர முன்வந்தால், அப்போது தான் இஸ்லாமியர்களின் தியாகத்தை மாற்று மதத்தினர் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

தற்போது பள்ளிவாசல், தேவாலயங்கள் வழிபாடு, பிரார்த்தனை நடத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிலையில் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வரும் கிறிஸ்துவர்களும் தங்களது தேவாலயங்களின் இடங்களை தந்து உதவினால், உலகிற்கே மத ஒற்றுமைக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் என்பதை உணர்த்த முடியும். ஆகவே பள்ளிவாசல் ஜமத்தார்களும், தேவலாயங்களின் நிர்வாகிகளும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்க தங்களது இடங்களை அளிக்க முன்வர வேண்டுமென மீண்டுமொரு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...