கொரோனா தடுப்பு “போர் வீரர்களுக்கு” ராணுவ போர் விமானம் மூலம் மலர் தூவி மரியாதை

இந்தியா

கொரோனா தடுப்பு “போர் வீரர்களுக்கு” ராணுவ போர் விமானம் மூலம் மலர் தூவி மரியாதை

கொரோனா தடுப்பு “போர் வீரர்களுக்கு” ராணுவ போர் விமானம் மூலம் மலர் தூவி மரியாதை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முப்படையினர் சார்பில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

இது குறித்து டெல்லியில் நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கொரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர்.நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் ராணுவம் உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் நாளை மாலை, இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து செல்லும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது போர் விமானங்கள் மலர்களை தூவும். மேலும், கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்துவதோடு, கப்பல்கள் வண்ண விளக்கொளியில் மிளிரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் உள்ள மருத்துவமனை முன்பு ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்படும் என்று பிபின் ராவத் கூறினார்.

இந்நிலையில் இன்று மே-3 கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முப்படையினரும் ஒருசேர நன்றி செலுத்தினர்.விமானப்படையின் போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஸ்ரீநகர் முதல் திருவனந்தபுரம் மற்றும் திப்ரூகர் முதல் கட்ச் வரையிலான முக்கிய நகரங்கள் மீது பறந்தன.


கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மீது கடற்படை மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இவை 500 மீட்டர் உயரத்தில் பறக்கும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இந்த காட்சியைப் பார்த்தனர். டில்லி ராஜ்பாத்திலும் போர் விமானங்கள் பறந்து, சுகாதார பணியாளர்களை கவுரவப்படுத்தின.வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் முன் ராணுவ இசை குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைத்து, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை கவுரவப்படுத்தினர்.


மும்பையில் ஐந்து கடற்படை கப்பல்கள் இரவு 7:30 மணி முதல் 11:59 மணி வரை அணிவகுத்து அனைத்து விளக்குகளையும் ஒளிர செய்வதுடன் ‘சைரனை’ ஒலிக்கவிடும்.கோவாவில் கடற்படை விமான நிலையத்தில் வீரர்கள் பங்கேற்கும் மனித சங்கிலி நடத்தப்பட உள்ளது.நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நினைவிடங்களில் முப்படையினர் மரியாதை செலுத்தினர்.

இதுபோல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மீது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

Leave your comments here...