கொரோனா தடுப்பு பணி : பிரதமர் நிவாரண நிதிக்கு வானமாமலை ஜீயர் சுவாமிகள் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

தமிழகம்

கொரோனா தடுப்பு பணி : பிரதமர் நிவாரண நிதிக்கு வானமாமலை ஜீயர் சுவாமிகள் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணி : பிரதமர் நிவாரண நிதிக்கு வானமாமலை ஜீயர் சுவாமிகள் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வானமாமலை மடத்தின் ஜீயர் சுவாமிகள் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஊரடங்கானது வரும் மே 18ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த சூழலில் ஒவ்வொரு பகுதியிலும், தொகுதிவாரியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை காத்துக் கொள்ள அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை மடத்தின் சார்பாக வானமாமலை மடத்தின் 31வது ஜீயர் ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் , பிரதமரின் நிவாரண நிதிக்கு ₹3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் , முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனிடம் வழங்கினார் .

பின்னர் வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பாக நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் கொரோனா எதிர்ப்பு முக கவசம் கை கால்களை சுத்தம் செய்ய கிருமி நாசினி மருந்து ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave your comments here...