கொரோனா பாதித்த நிறைமாத கர்பிணி ; உதவிய ராகவ லாரன்ஸ் – குவியும் பாராட்டுகள்..!!

சமூக நலன்சினிமா துளிகள்தமிழகம்

கொரோனா பாதித்த நிறைமாத கர்பிணி ; உதவிய ராகவ லாரன்ஸ் – குவியும் பாராட்டுகள்..!!

கொரோனா பாதித்த நிறைமாத கர்பிணி ; உதவிய ராகவ லாரன்ஸ் – குவியும் பாராட்டுகள்..!!

கொரோனா பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணிக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்:-

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்!

“கொரோனா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்!
நமது அரசாங்கத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்!
——————————————-
நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்!
நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்,
அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார்,
எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள்,
இத்தகவலை நான்
மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான திரு ரவி சார் அவர்களுக்கு தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தார்.

அப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள்… உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்து
தாயையும் குழந்தையையும் வெற்றிகரமாக காப்பாற்றினர்.
இந்த பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்து நலமாக உள்ளது!

“அப்பெண் கொரோனாவிலிருந்து கூடிய விரைவில் குணமடைவார்” என்று மருத்துவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர்.
இந்த நேரத்தில்…..
தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி சார் அவர்களுக்கும்,
மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களுக்கும், மற்றும் அவரது பி.ஏ. திரு ரவி சார் அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

அத்துடன்…. மருத்துவர்கள்…
டாக்டர் ஜானகி, டாக்டர்.ஐஸ்வர்யா,
டாக்டர்மது,
டாக்டர் சாந்தி,
டாக்டர் லாவண்யா,
ஆகிய அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள்…
அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும், தயவுசெய்து அப்பெண் கொரோனாவிலிருந்து சீக்கிரமே
குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள்.

சேவையே கடவுள்!.
நன்றி!

அன்புடன் உங்கள்….
“ராகவா லாரன்ஸ்” என பதிவிட்டுள்ளார்.


தற்போது இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாக கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Leave your comments here...