‘மருத்துவர்’ சைமனின் ‘உடல் அடக்கத்தை’ தடுத்த ‘பெண் உட்பட’ 14 பேர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்

தமிழகம்

‘மருத்துவர்’ சைமனின் ‘உடல் அடக்கத்தை’ தடுத்த ‘பெண் உட்பட’ 14 பேர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்

‘மருத்துவர்’ சைமனின் ‘உடல் அடக்கத்தை’ தடுத்த ‘பெண் உட்பட’ 14 பேர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் போற்றப்பட வேண்டியவர்களாக உள்ள நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹர்குலஸின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த சம்பவம், சக மருத்துவர்கள் இடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவிடாமல் நடைபெற்ற வன்முறைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். பின்னர் டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி சைமன் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த பேராயர் அந்த கல்லறையில் சைமனின் உடலை புதைக்க அனுமதி தெரிவித்தார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் வேலங்காடு மயானத்தில் டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 21 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொரோனவால் மரணித்தோர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்போருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனிடையே மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த 14 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Leave your comments here...