26 நாட்களாக ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு அளித்து வரும் குமரி அயோத்யா ஆர்எஸ்எஸ் காரியாலயம்…!!

தமிழகம்

26 நாட்களாக ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு அளித்து வரும் குமரி அயோத்யா ஆர்எஸ்எஸ் காரியாலயம்…!!

26 நாட்களாக ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு அளித்து வரும் குமரி அயோத்யா ஆர்எஸ்எஸ் காரியாலயம்…!!

கொரோனாவை தடுக்க ஊரடங்கு அவசியம் என்பதால், வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. கொரோனா சமூக தொற்றாக பரவாமல் தடுப்பதற்காக தேசிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள், ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், தவிக்கின்றனர். அவர்களை தேடிச் சென்று, உணவு வழங்கும் பணியில், அயோத்யா ஆர்.எஸ்.எஸ். காரியாலயம் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமும் காலையில் உணவு தயாரிக்கும் பணி துவங்குகிறது. பின்னர் சாலைகளில் தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்குகின்றனர். உணவு தயாரிப்பு மற்றும் வினியோக பணியில், அப்பகுதி ஆர்எஸ்எஸ் இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

அயோத்யா ஆர்.எஸ்.எஸ். காரியாலயம் மூலம் கடந்த 26 நாட்களாக உணவுகள் தயாரித்து வழங்கி வருகிறார்கள். குமாரகோவில், இரணியல் , அழகியமண்டபம், தக்கலை, பேயன்குழி, வில்லுக்குறி, திக்கணாங்கோடு, திருவிதாங்கோடு, சுங்கான்கடை, பார்வதிபுரம்,மண்டைக்காடு, திங்கள்சந்தை உட்பட பல பகுதிகளில் ஏழை மக்களுக்கும் சாலையோரத்தில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கும், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊரடங்கு முடியும் வரையிலும் எங்களது பணிகள் தொடரும் என கூறியுள்ளார்கள்.!

Leave your comments here...