மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று – விஷம பிரசாரம் செய்வர்கள் செயல் கண்டிக்கதக்கது : வி.எம்.எஸ்.முஸ்தபா குற்றச்சாட்டு

தமிழகம்

மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று – விஷம பிரசாரம் செய்வர்கள் செயல் கண்டிக்கதக்கது : வி.எம்.எஸ்.முஸ்தபா குற்றச்சாட்டு

மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று –  விஷம பிரசாரம் செய்வர்கள் செயல் கண்டிக்கதக்கது :  வி.எம்.எஸ்.முஸ்தபா குற்றச்சாட்டு

மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று என விஷம பிரசாரம் செய்வர்கள் செயல் கண்டிக்கதக்கது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:- இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே நாள்தோறும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 29-ம் தேதி புதன் கிழமை வரை 5 மாவட்டங்களில் தமிழக அரசு முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், தேவலாயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளது. கோயில்களில் மட்டுமே ஆகமவிதிப்படி தினமும் பூஜை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு யாரும் அனுமதி அளிக்கப்படுவதில்லை, இருப்பினும் ஆகமவிதிப்படி தினமும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் பட்டர்கள் கோவிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். கோவில் பட்டர்கள், கோவில் பணியாளர்கள், கோவில் காவல் நிலைய போலீசார் மட்டுமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று 2 தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் அவருக்கு கொரானா எப்படி பரவியது என்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட கோவில் பட்டர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளார். அவர் வழியாகவே கொரோனா தொற்று பரவியதாக தகவல் தெரிகிறது. சம்பந்தப்பட்ட பட்டர் கோவிலுக்கு வந்த பொழுது சக பட்டர்கள் மற்றும் பணியாளர்கள் அவருடன் பழகியுள்ளதால் ஒட்டுமொத்தமாக அனைத்து பட்டர்களின் குடும்பங்களும் வரவழைக்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சிலர் விஷம பிரசாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சைவம், வைனவம் என்றும் இதில் சைவ சமயத்தை பின்பற்றும் பட்டர்களுக்கு தான் பாதிப்பு என்றும், வைனவத்தை பின்பற்றும் சிவாசாரியார்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும் இந்து மதத்திற்குள்ளே சில வேற்றுமை விதைக்கும் செயல்களில் சிலர் களமிறங்கியுள்ளனர்.

ஏற்கனவே டெல்லி மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமியர்கள் மூலம் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என பொய்பிரசாரம் செய்து வந்தவர்கள், சவுக்கடி கொடுக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்கள் 80 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மேலும் இவர்களிடமிருந்து ரத்த தானம், உமிழ் நீர் ஆகியவற்றை பெற்று பிளஸ்மா சிகிச்சை அளிக்கவும் தமிழக சுகாதார துறை ஆலோசித்து வருகிறது.

இப்படி இஸ்லாமியர்கள் மீது வீண் பழி சுமத்தியவர்கள் தற்போது சைவம், வைனவம் என இந்துக்களிடையே பிரிவினையே ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா என்பது ஏழை, பணக்காரன், சாதி, மதம் பார்த்து வருவது இல்லை என்பதை ஒரு சிலர் இன்னுமும் நம்பி மறுப்பது வேதனை அளிக்ககூடிய செயலாகும். சில சமூக வலைதளங்களிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து அவதூறு செய்திகளையும், கார்ட்டூன்களையும் வெளியிட்டு வருவது தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர், அவரது குடும்பத்தார் மற்றும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை அனைவரையும் பிராத்திப்போம் என கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...