சகாய நகர் ஊராட்சியில் நலிவுற்றோர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மகேஷ் ஏஞ்சல் உதவிகள் வழங்கினார்..!

தமிழகம்

சகாய நகர் ஊராட்சியில் நலிவுற்றோர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மகேஷ் ஏஞ்சல் உதவிகள் வழங்கினார்..!

சகாய நகர் ஊராட்சியில்  நலிவுற்றோர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மகேஷ் ஏஞ்சல்  உதவிகள் வழங்கினார்..!

உலக நாடுகள் அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வாரமல் இருந்து வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட சகாய நகர் ஊராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள நலிவுற்ற அதாவது பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை எளியவர்களுக்கு கடத்த 20 நாட்களாக ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் ஏற்ப்பாட்டில் அரிசி, காய்கனிவகைகள், மளிகை பொருட்கள், சாப்பாடு ஆகியவைகளும், முக கவசங்கள், வளங்கப்பட்டு வருகின்றனர்.

அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி மருந்துகளும் தெளித்து வருகின்றனர். ஆதரவற்றோர், விதவைகள்,முதியோர்களுக்கும் பொருள் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர், ஏழை மக்களுக்கு பொருளதவிகள் வழங்கிய கிருஷ்து நகர் கார்டன் சுபி.ஆல்பர்ட், கால்நடை மருத்துவ கம்பவுண்டர் ராஜேஷ் சந்திரசேகரன், ஜீவகாருண்யா டிரஸ்டுக்கும், ஆசீர் மாலின், திருமலைபுரம் இளைஞர் மக்களுக்கும்
நன்றியினை தெரிவிப்பதோடு தோவாளை யூனியன் பிடிஒ இங்கர்சால், ஓசிஆர். சுகுமாரன், கால்நடை மருத்துவர் ஜேக்கப் ஆகியோர்கள் கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கி கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக கூடாது என்றும் அரசும் சுகாதாரத்துறையும் கூறுவதை கேட்டு நடந்தால் கொரோனாவை ஒழிக்கலாம் எனவும் உங்களது தேவைகள் எதுவானாலும் உங்களது ஊராட்சி மன்ற தலைவரை நாடுங்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பெரியோரின் பொன் மொழி போல் பணியாற்றும் சகாய நகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல் அவர்கள் அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். அவர்களுக்கு இதயபூர்வமான நன்றி என கூறினார்கள். அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் நன்றி கூறினார் தொடர்ந்து இந்த உணவு பொருட்கள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன

செய்தி
மெடிக்கல் அல்போன்ஸ்

Leave your comments here...