அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்த குரங்குகள் – தனது விவசாய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை வழங்கிய இளைஞர்

சமூக நலன்தமிழகம்

அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்த குரங்குகள் – தனது விவசாய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை வழங்கிய இளைஞர்

அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்த குரங்குகள்  – தனது விவசாய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை வழங்கிய இளைஞர்

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு போதிய வசதிகளை அரசு செய்து உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புகழ்பெற்ற தலமான அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது.

தற்போது அர்த்தநாரீசுவரர் கோவிலில் பக்தர்களும், சுற்றுலா பயணிகள் செல்லாத நிலையில் அங்குள்ள குரங்குகள் உணவின்றி தவிர்த்து வருகிறது. இக்கோயிலின் வழிநெடுகிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு, தினம்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் பொறி, கடலை தண்ணீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். அதை உண்டு அந்தக் குரங்குகள் வயிற்றுப் பசியை நிரப்பிக் கொண்டு வந்தது.மேலும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது கோவில். சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வராத நிலையில் அங்கிருக்கும் குரங்குகள் தற்பொழுது உணவின்றி தவித்து வருகின்றன.

இந்நிலையில் அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கோபிநாத் என்ற இளைஞர் தனது விவசாய தோட்டத்தில் விளைந்து பழுத்த வாழைப்பழங்களை வழங்கி வருகிறார். தற்போது அந்த இளைஞரின் செயல் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதன் காணொளி சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..!

Leave your comments here...