புலி மற்றும் சிங்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..

உலகம்

புலி மற்றும் சிங்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..

புலி மற்றும் சிங்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் நியூயோர்க் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. நியூயோர்க்கில் மட்டும் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நியூயோர்க்கில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற, ‘பிராங்ஸ்’ வனவிலங்கு பூங்காவில் உள்ள நாடியா என்ற புலிக்கு, கொரோனா தொற்று, சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி தென்படாத பூங்காவின் ஊழியரிடம் இருந்து, புலிக்கு தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிராங்ஸ் வனவிலங்கு பூங்காவை சேர்ந்த, மேலும் நான்கு புலிகள் மற்றும் மூன்று சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மூலம் விலங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியூயார்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லப்பிராணிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை.
இரண்டு பூனைகளுக்கும் லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து அதிக அளவில் பரவுவதாக தகவல்கள் இல்லை என்றும் அதனால் மக்கள் யாரும் அச்சம் கொண்டு, செல்லப்பிராணிகளை தனித்து விடத் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளியே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் அதன் அருகில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் வீட்டிற்குள்ளேயே இருப்பது போல், செல்லப்பிராணிகளையும் வெளியே அனுப்பாமல் இருப்பது நல்லது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...