மனநலம் குன்றி உணவில்லாமல் சுற்றிதிரிந்த வாலிபருக்கு உணவு அளித்த மோகனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ..!

தமிழகம்

மனநலம் குன்றி உணவில்லாமல் சுற்றிதிரிந்த வாலிபருக்கு உணவு அளித்த மோகனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ..!

மனநலம் குன்றி உணவில்லாமல் சுற்றிதிரிந்த வாலிபருக்கு உணவு அளித்த மோகனூர் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் ..!

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 18,601 ஆக இருந்தது. நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 232 பேர் பலியாகி இருந்தனர். 572 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர்.

மேலும் மக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளுக்கு உள்ளேயே தனிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையினர் இரவு பகலாக பொதுமக்கள் வெளியே நடமாடாமல் பார்த்து கொள்ளுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை காரணமாக நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மனநலம் குன்றி சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து வந்து, கொரோனா தடைக் காலத்தில் உணவில்லாமல் சிரமப்பட்டு வந்த அந்த வாலிபருக்கு மோகனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் உணவு அளித்தார்.இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள்

Leave your comments here...