உலகளவில் 25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

உலகம்

உலகளவில் 25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

உலகளவில் 25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 25,00,448 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,58,069 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு இதுவரை 1,71,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 603 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,260 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Leave your comments here...