நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை..?

இந்தியா

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை..?

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை..?

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. 507 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களனின் எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. 507 பேர் உயிரிழந்துள்ளனர். 2,231 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து வித விவசாய பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார்.

அப்போது, அவர் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் வருகிற 20-ந்தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.இந்த நிலையில் 20-ந்தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* பொது வினியோகத்துறை செயல்படும்.
* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.
* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...