தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்…!!!

தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்…!!!

தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்…!!!

இந்தியா முழுவதும் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஊரடங்கானது வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த சூழலில் ஒவ்வொரு பகுதியிலும், தொகுதிவாரியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை காத்துக் கொள்ள அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். தனித்திருப்பது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்களிடையே ஏற்படுத்த அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களைக் கௌரவப்படுத்துவது போன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை நடத்தி அசத்தியிருக்கிறது திருநெல்வேலி காவல்துறை. கொரோனா தொற்று எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டுவரும் சேவை மகத்தானது என்று மக்கள் உணர்கிறார்கள் என்பதையே இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இந்நிலையில் விசுவ ஹிந்து பரிஷத் – தென் தமிழ்நாடு தலைமை அலுவலகம் அமைந்து உள்ள ஸ்ரீரங்கத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள் 53 பேருக்கு மரியாதை செய்து கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் தூய்மைப் பணியாளர்களின் கால்களை மஞ்சள் தண்ணீரால் சுத்தம் செய்து பாத பூஜை செய்தபின் , அவர்களுக்கு மாலை மரியாதையுடன் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு அவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்கள். மேலும் தினம் தினம் மூன்று வேலை உணவு பொட்டலங்கள் ஆயிரகணக்கான ஆதரவற்றவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

Leave your comments here...