கொரோனா தடுப்பு பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி..!

தமிழகம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி..!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார்.

இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

டாடா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறிய தமிழக அரசுக்கு 40,032 PCR kit கருவிகளை டாடா நிறுவனம் தந்துள்ளது. ரூ.8 கோடி மதிப்புள்ள கருவிகளை தந்ததற்காக டாடா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணியாளர்களின் மேம்பாட்டிற்காக, ஸ்டெர்லைட் பணியாளர்களின் ஒருநாள் ஊதியமான 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, 10 சுய உதவி குழுக்களுடன் இணைந்து, முகக் கவசம், கிருமினி நாசினி போன்றவை தயாரித்து, துாத்துக்குடியில் உள்ள, 20 கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்டெர்லைட் ஆலை சார்பில், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் முன்னணி பணியாளர்களுக்கு, 200 செட் தனிநபர் பாதுகாப்பு உபரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், 200 செட் உபகரணங்கள் தயாராகி வருகின்றன. கூடுதலாக, முதல்வர் நிவாரண நிதிக்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...