சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ட்ரோன் வீடியோ…!

தமிழகம்

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ட்ரோன் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ட்ரோன் வீடியோ…!

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றிவருகின்றனர். எனவே அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் போலீசார் ஊரடங்கு மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும்போது, ஒரு மரத்தடியில்
கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இளைஞர்கள் தெரித்து பயந்து ஓடிய வீடியோ ஜல்லிக்கட்டு பின்னணி இசையுடன் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.


மக்கள் நடமாட்டத்தை காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வரும் சூழலில் கேமராவை பார்த்ததும் கேரம் விளையாடிய இளைஞர்களில் ஒருவர் மட்டும் கேரம் போர்டினை எடுத்துச் சென்று தன் முகம் தெரியாதவாறு மறைந்துக் கொண்டு அமர்கிறார்.

அந்த நபர் மீண்டும் அலறிஅடித்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.இந்த காட்சியை பதிவு செய்த காவல்துறையினர் பொது மக்களின் விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave your comments here...