தூய்மை பணியாளர்கள் பயந்த நிலையில் தனது தொகுதியில் இறங்கி மாஸ் காட்டும் M.L.A.ரோஜா

இந்தியா

தூய்மை பணியாளர்கள் பயந்த நிலையில் தனது தொகுதியில் இறங்கி மாஸ் காட்டும் M.L.A.ரோஜா

தூய்மை பணியாளர்கள் பயந்த நிலையில்  தனது தொகுதியில் இறங்கி மாஸ் காட்டும் M.L.A.ரோஜா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும் இந்த கொடிய வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதித்தவர்களின் வீடுகளின் அருகில் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர்.அதே போல் ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை என்னும் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினிகொண்டு சுத்தம் செய்ய அப்பகுதி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அச்சத்தின் காரணமாக தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினியை தெளிக்க தயக்கம் காட்டி வந்தனர்.

இந்த தகவல், நடிகையும், அத்ததொகுதி எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற அவர் தானே முன்னன்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரின் துணிச்சலை பார்த்த பின்னர் தூய்மைபணியாளர்கள் களம் இறங்கினர். ரோஜாவின் அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினர்.

Leave your comments here...