பஞ்சாப் வன்முறை கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை மீண்டும் வெற்றிகரமாக இணைப்பு

இந்தியா

பஞ்சாப் வன்முறை கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை மீண்டும் வெற்றிகரமாக இணைப்பு

பஞ்சாப் வன்முறை கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை மீண்டும் வெற்றிகரமாக இணைப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் காவலர்கள் வழக்கம் போல ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றுவதற்கு வாகன சோதனையிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுக்கொண்ண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அந்த பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் வந்த நிகாங் என்னும் சீக்கிய மதப்பிரிவைச் சேர்ந்த 6 பேர் காவலர்கள் வைத்திருந்த தடுப்புகளை மோதி தள்ளிவிட்டு செல்ல முயன்றனர். அப்போது வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் பயணம் செய்வதற்கான அனுமதி சீட்டை கேட்டுள்ளனர். ஆனால் காவலர்கள் கேட்ட அனுமதி சீட்டை அளிக்காமல், வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து காவலர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். இதில் உதவி காவல் ஆய்வாளர், ஹர்ஜீத் சிங்கின் கை துண்டிக்கப்பட்டது, மேலும் இரு காவலர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பின்னர் அங்கிருந்த தப்பிச் சென்ற நிகாங் பிரிவைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக, காவல் அதிகாரிகள் குருதுவாராவிற்கு சென்றனர். ஆனால் காவலர்களை அங்கிருந்த மதக் குருக்கள் குருதுவாராவிற்குள் அனுமதிக்காததால் நடுநிலையாளர்கள் சிலர் குருதுவாரவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி, காவலர்களை தாக்கியவர்களை வெளியே அழைத்து வந்தனர். இதில் 3 பேரை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கையுடன் சண்டிகாரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவுமனையில் சப் -இன்ஸ்பெக்டர் ஹர்ஜித்சிங் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கையை இணைத்தனர்.

Leave your comments here...