உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறைக்கைதிகள் பங்களிப்பு : பாதுகாப்பு கவச உடைகள் மாஸ்க்குகளை தயாரித்து கொடுக்கின்றனர்..!

இந்தியா

உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறைக்கைதிகள் பங்களிப்பு : பாதுகாப்பு கவச உடைகள் மாஸ்க்குகளை தயாரித்து கொடுக்கின்றனர்..!

உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறைக்கைதிகள் பங்களிப்பு : பாதுகாப்பு கவச உடைகள் மாஸ்க்குகளை தயாரித்து கொடுக்கின்றனர்..!

இந்தியாவில் கடந்த வாரம் தொடங்கி கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது. பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.

இப்படி இருக்க மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் கொரோனா வைரசில் (COVID-19) இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதன்பேரில், 2 ஆயிரம் முக கவசங்களை உருவாக்கி உள்ளனர்.

இதுபோல் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனக்கருதிய உத்தரபிரதேச சிறைக்கைதிகள், டாக்டர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் மாஸ்க்குகளை தயாரித்து கொடுக்கின்றனர். இவற்றை, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி தயாரித்து கொடுத்துள்ளனர்.தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசயில் 431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்த நிலயில், 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இது தொடர்பாக உத்தரபிரதேச சிறைத்துறை டிஜிபி ஆனந்த்குமார் கூறியதாவது: அரசு தெரிவித்த விதிமுறைகளின்படி, உ.பி., சிறைகளில் உள்ள கைதிகள், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள்- 50(எண்ணிக்கையில்) தயாரித்து, லக்னோவில் உள்ள பலராம்பூர் மருத்துவமனை டாக்டர்களுக்கு அளித்துள்ளனர். தனிநபர் பாதுகாப்பு கவச உடை ஒன்றின் விலை ரூ.600 ஆகும். இன்னும் 100 உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் 5 லட்சம் மாஸ்க்குகள் தயாரித்து கொடுத்துள்ளனர்.பலராம்பூர் மருத்துவமனை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின்படி, இந்த உடைகள் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது. உடை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை, மருத்துவமனை தேர்வு செய்தனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனைபடி கொள்முதல் செய்யப்பட்டது . இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள பராபங்கி, காஜியாபாத், ஃபிரோசாபாத் மற்றும் களெதம புத்த நகர் ஆகிய மாவட்ட சிறைகளும் முக கவசங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடடு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...