விவசாய நிலத்தில் கை உடைந்த நிலையில் ஐம்போன் சிலை கண்டெப்பு..!

தமிழகம்

விவசாய நிலத்தில் கை உடைந்த நிலையில் ஐம்போன் சிலை கண்டெப்பு..!

விவசாய நிலத்தில் கை உடைந்த நிலையில் ஐம்போன் சிலை கண்டெப்பு..!

தருமபுரி அருகே குட்டூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் அம்மன் சிலை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தர்மபுரி அருகே குட்டூரை சேர்ந்தவர் குமார்(30). இவர் விவசாய நிலத்தில் நேற்று காலை தனது நிலத்தில் உழவுப் பணிகளை டிராக்டா் மூலம் மேற்கொண்டாா்.அப்போது, ஏா் உழுத போது திடீரென நிலத்தில் ஒரு அம்மன் சிலை தென்பட்டது. இதையடுத்து அதனை உழவுப் பணிகளில் இருந்தவா்கள் வெளியே எடுத்தனா்.

இந்த சிலை, சுமாா் 2 அடி உயரமும் 20 கிலோ எடையும் இடது கை பாகம் உடைந்த நிலையிலும் இருந்தது.சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த, அப்பகுதி சுற்று வட்டார மக்கள் அங்கு திரண்டனா். மேலும், அந்த சிலைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறப்பு பூஜை செய்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியா், குட்டூா் கிராமத்துக்கு சென்று விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அச்சிலையை மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றாா். இதையடுத்து, அந்த சிலை தருமபுரி அகழ்வைப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.குட்டூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் கிடைத்த அம்மன் சிலை எந்த உலோகத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் அதனுடைய காலம் குறித்த விவரங்கள் தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னா் தெரியவரும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.சிலையில் ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது. எங்காவது கோயிலில் திருடி விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave your comments here...