கோவிட்-19 மற்றும் எதிர்காலச் சவால்களுக்கான ‘’சமாதான்’’ சவால் போட்டியை தொடங்கியது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இந்தியா

கோவிட்-19 மற்றும் எதிர்காலச் சவால்களுக்கான ‘’சமாதான்’’ சவால் போட்டியை தொடங்கியது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட்-19 மற்றும் எதிர்காலச் சவால்களுக்கான ‘’சமாதான்’’ சவால் போட்டியை தொடங்கியது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புதுமை பிரிவு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை உடன் இணைந்து, மாணவர்களின் புதுமைத் திறனைச் சோதிக்க – சமாதான் – என்னும் பெரிய அளவிலான ஆன்லைன் சவால் போட்டடியைத் தொடங்கியுள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், முயற்சிகளை மேற்கொண்டு, கொரோனோ வைரஸ் தொற்று மற்றும் அது போன்ற இதர பேரிடர்களுக்கு, அரசு முகமைகள், சுகாதார சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் இதர சேவைகள், விரைவான தீர்வை வழங்குவதற்கு, உரிய புதுமையான திட்டத்தை உருவாக்குவார்கள். இது தவிர இந்த சமாதான் சவால் மூலம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களை ஊக்குவித்தல், எந்தவித சவாலையும் சந்தித்தல், எந்த நெருக்கடியையும் தடுத்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க உதவுதல் ஆகியவற்றுக்கான பணிகள் செய்யப்படும்.


‘’சமாதான்’’ போட்டியின் கீழ், மாணவர்களும் கல்விப் புலமும், புதிய சோதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். சோதனை மற்றும் கண்டுபிடிப்புக்கான வலுவான தளம் அவர்களுக்கு வழங்கப்படும். இதில் கலந்து கொள்பவர்களின் திறமை, தீர்வு காண்பதற்கான யோசனைகள் எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியிலும், வணிக ரீதியிலும் கொரோனோவைரஸ் போன்ற தொற்றுகளுக்கு எதிராகப் போரிட உதவும் என்பதைப் பொறுத்தே இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவது ஏப்ரல் 7-ம்தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 14ம் தேதி ஆகும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர்கள் ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்படும். போட்டியாளர்கள், தங்கள் நுழைவுப் பதிவுகளை ஏப்ரல் 18 முதல் 23-ம்தேதி வரை அனுப்பலாம். இதன் இறுதிப் பட்டியல் ஏப்ரல் 24-ம்தேதி வெளியிடப்படும். இதன் பின்னர், ஆன்லைன் நடுவர், வெற்றியாளர்களின் பெயர்களை ஏப்ரல் 25-ம்தேதி தீர்மானிப்பார்.

Leave your comments here...