கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி..!

இந்தியாதமிழகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி..!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது

இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் தமிழ் பட நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI தொழிலாளர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் தனுஷ் 15 லட்சம் ரூபாய் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார். சூர்யா, சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியாக அளித்துள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்

Leave your comments here...