கொரோனா பரவல் : பிரதமர் குறித்து அவதூறு பேச்சு – அள்ளி சென்ற போலீஸ்..!

தமிழகம்

கொரோனா பரவல் : பிரதமர் குறித்து அவதூறு பேச்சு – அள்ளி சென்ற போலீஸ்..!

கொரோனா பரவல் : பிரதமர் குறித்து அவதூறு பேச்சு – அள்ளி சென்ற  போலீஸ்..!

கொரோனா வைரஸின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என அறுவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே நடமாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்று குறித்து முகநூல், வாட்ஸ் ஆப்-ல் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்பை விமா்சனம் செய்யும் வகையில் வாட்ஸ் ஆப்-ல் சிலா் அவதூறு பரப்புவதாக குமரி மாவட்டம், கிள்ளியூா் ஒன்றிய (வடக்கு) பாஜக தலைவா் செந்தில்குமாா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த மிதுன், சுஜின், பபிநிசேன் மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் மிதுன் மற்றும் 17 வயது சிறுவா்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்தனா். மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

Leave your comments here...