ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள், போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் – உத்தரபிரதேச அரசு

இந்தியா

ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள், போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் – உத்தரபிரதேச அரசு

ஆபாச  நடத்தையால்  தப்லிக்  ஜமாத்  உறுப்பினர்களின்  சேவையில்  ஆண்  சுகாதார  ஊழியர்கள், போலீசார்  மட்டுமே  ஈடுபடுவார்கள் – உத்தரபிரதேச அரசு

டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அப்புறபடுத்தபட்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் உத்தரப் பிரதேச மாநில காசியாபாத் எம்எம்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனிமை வார்டில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் அங்கு சிகிச்சைபெறும் 6 பேரும் ஆஸ்பத்திரி வார்டுக்குள்ளேயே நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.


அந்தப் புகாரில் “கொரோனா தொற்றுடன் காசியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதுடன், அவ்வாறு நடந்துகொண்ட 6 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என கூறி உள்ளது.

மேலும், காசியாபாத் மருத்துவமனையில் பெண் நர்சிங் ஊழியர்களுடன் தவறாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத்தின் உறுப்பினர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்ய யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது

Leave your comments here...