வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியா

வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2069-ல் இருந்து 2,301 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், 56 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறியதாவது;-ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.சமூக இடைவெளியை மக்கள் விட்டு கொடுக்கக்கூடாது.கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களின் ஏமாற்றத்தை போக்க வேண்டும்.


வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது.வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம். ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.அப்போது அமைதியாக இருந்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் கொரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக இருப்போம் என காட்டுவோம். வெளியே வராமல் வீட்டு வாசல்அல்லது பால்கனியில் இருந்து மக்கள் ஒளியேற்றலாம். உற்சாகமாக இருந்து கொரோனாவை எதிர்த்துமக்கள் போரிட வேண்டும். உற்சாகத்தைவிட மிகச்சிறந்த சக்தி இல்லை. அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். என்றார்.

Leave your comments here...