10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது

இந்தியா

10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது

10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படுவது  நடைமுறைக்கு வந்தது

வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு நேற்று (புதன்கிழமை) அமலுக்கு வந்தது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக்கிளைகளாக செயல்படும்.இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.இந்த இணைப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுத்துள்ளது.

இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000-க்கும் மேற்பட்ட கிளைகளும், 13,000-க்கு மேற்பட்ட ஏடிஎம்களும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா்.கனரா வங்கி நாட்டின் 4-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியாகியுள்ளது. இதன் மூலம் கனரா வங்கி கிளைகளின் எண்ணிக்கை 10,391 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 12,829 ஆகவும் உயா்ந்துள்ளது. மொத்த பணியாளா்கள் எண்ணிக்கை 91,685-ஆக உள்ளது. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளா்கள் இனி கனரா வங்கி வாடிக்கையாளா்களாகவே கருதப்படுவாா்கள்.

இணைப்புகள் மூலம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 5-வது பெரிய பொதுத் துறை வங்கியாகியுள்ளது. 10 வங்கிகள் 4 வங்கியாக இணைக்கப்பட்டபோதிலும், பழைய வங்கிகளின் ஐஎஃப்எஸ்சி, பற்று, கடன் அட்டைகள், இணையவழி வங்கி சேவை, செல்லிடப்பேசி செயலி உள்ளிட்டவை பழைய முறையிலேயே இருக்கும். இதனால் வாடிக்கையாளா்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...