கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

இந்தியாதமிழகம்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை தடை செய்ய வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை  தடை செய்ய வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது கூகுள் நிறுவனம் தான் என்பது கொடுமையிலும் கொடுமை. ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்.நீங்கள் உடனே ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய் என்று துண்டில் இடுவார்கள். விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் வரும்.நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விபரத்தை அனுப்புவீர்கள்.அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு “சிறப்பு சாப்ட்வேர்” மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும்.

உங்கள் அக்கவுண்டில் 1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்.நீங்கள் ரம்மி விளையாட்டில் கில்லி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள்.அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும்.. நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும். இதுதான் இன்றைய நிலைமை.

ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்..அது இந்தியாவில் சட்ட விரோதம் அதை தடை செய்ய வேண்டும் மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப்போகும் ஆபத்து குறித்து உணரவில்லை. ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் போண்டி ஆகிவிடுவார்கள். கொரோனாவை விட கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில் தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. ஆன்லைன் ரம்மி உட்பட சூதாட்ட இணைய தங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...