ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா

ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கடந்த 25 ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். ஆனால் மக்கள் பலர் வெளியே சுற்றுவதும், பொறுப்பற்ற முறையில் கூடுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் வெளியே சுற்றியதாக நாடு முழுவதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கின்றனர். ஆங்காங்கே சாலைகளில் வருவோருக்கு லேசான தண்டனையும் போலீசார் வழங்குகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கை மீறி சாலைகளுக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதிலும் அவ்வாறு வெளியே வரும் நபர்களை பிடித்து தனிமைப்படுத்தும் முகாமில் வைக்க வேண்டும். சாலைகளில் உணவு மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கவும். குறிப்பாக மாவட்ட எல்கைகள மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...