மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா

மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் – பிரதமர் நரேந்திர மோடி

மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் – பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார் பிரதமர்.தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் கூறியிருப்பதாவது: கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது, உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு , மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் முன்கூட்டிய ஆராய்ச்சி முடிவுகள் இத்தகைய ஒருங்கிணைந்த செயலின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகின்றன.எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம்.


பொதுமக்களின் சிறிய உதவிகளையும் அரசு ஏற்று கொள்ளும். இது இந்திய மக்களின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். பேரிடர்களின்போது மக்களை காக்க இது போன்ற நிதி பெரும் அளவில் உதவியாக இருக்கும். அனைவரும் நிதி வழங்குங்கள் கூறியுள்ளார்.

Leave your comments here...