சிறப்பு அந்தஸ்து ரத்து….! ஒரே நாடு…! ஒரே சட்டம்..! அமித்ஷாவின் நேர்கொண்ட பார்வை

அரசியல்

சிறப்பு அந்தஸ்து ரத்து….! ஒரே நாடு…! ஒரே சட்டம்..! அமித்ஷாவின் நேர்கொண்ட பார்வை

சிறப்பு அந்தஸ்து ரத்து….! ஒரே நாடு…! ஒரே சட்டம்..! அமித்ஷாவின் நேர்கொண்ட பார்வை

மத்திய உள்துறை அமித்ஷா மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35A சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தஸ்து ரத்துடன் ஜம்மு- காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா ‘‘காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசம் என்பது தற்காலிகமானதே’’ என்றார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே; காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங்கிரஸ்  விரும்புகிறதா? ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறினார். சட்டப்பிரிவு 370-க்கும், 371-க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 370 தற்காலிக ஏற்பாடு. ஆனால் சட்டப்பிரிவு 371 மராட்டியம், குஜராத், ஆந்திரா, நாகலாந்து, மிசோரம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்பு பலன்களை அளிப்பது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. அனைத்து மாநிலங்களுக்கும் நான் அளிக்கும் உறுதி, நரேந்திர மோடி அரசு சட்டப்பிரிவு 371-ஐ ரத்து செய்யாது. மேலும் பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது . பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என கூறினார். ஜம்மு – காஷ்மீர் என்றுமே தீவிரவாதிகளின் மாநிலமாக இருக்க வேண்டுமா? எங்களுக்கு 5 வருடங்கள் கொடுங்கள். ஜம்மு காஷ்மீரை வளர்ந்த மாநிலமாக மாற்றுகிறோம். அதற்கு ஒரே தீர்வு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது தான். பாகிஸ்தான் குழுவினர் இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப முயல்கின்றனர்.

குஜராத், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏன் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அங்கெல்லாம் சட்டப்பிரிவு 370 இல்லை என்பதே. சட்டப்பிரிவு 370ஐ இன்று நீக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் போகும். எங்களுக்கு மத அரசியலில் நம்பிக்கை இல்லை. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மட்டுமா வசிக்கிறார்கள்? இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினர் என பலரும் வசிக்கிறார்கள். சட்டப்பிரிவு 370 நல்லது என்றால் அது எல்லாருக்குமானது. கெட்டது என்றாலும் அது அனைவருக்குமானது என தெரிவித்தார்.

Leave your comments here...