முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா

முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரையாடி நிலைமைகளை விளக்கினார்.

இந்நிலையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்றுமுப்படை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி படோரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங், ராணுவ தளபதி நரவானே கலந்து கொண்டனர்.இவர்கள் தவிர முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பாதுகாப்பு செயலர் அஜய் குமார் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.


இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-தற்போது நாட்டை சூழ்ந்துள்ள கொரோனா அபாயத்தை எதிர்கொள்ள ராணுவமும் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.பாதிக்கப்பட்ட மக்களைதனிமைப்படுத்துவதுதான் மிக முக்கியபணியாக உள்ளது.அதற்கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினரை ஈடுபடுவார்கள்.குறிப்பாக புயல்வேகத்தில் மருத்துவமனைகளை உருவாக்குதல் ராணுவத்தில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரை களத்தில் இறக்குவது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

நாட்டின் எந்த மூலைக்கும் விரைந்து சென்று கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் ராணுவத்திற்கான தேவை குறித்து கோரிக்கை வரலாம்என்பதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் கேட்டுள்ளார் என அந்த அதிகாரி கூறினார்.

Leave your comments here...