ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து – திருவிதாங்கூர் தேவஸ்தானம்

இந்தியா

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து – திருவிதாங்கூர் தேவஸ்தானம்

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து – திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் வீட்டிலேயே இருக்கவும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி வாசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 7-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு திருவிழாவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதே போல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது.சபரிமலையில் சித்திரை மாத பூஜை மற்றும் வி‌ஷூ சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...