விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தமிழகம்

விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடையே பேசியதாவது:- அதில் பேசிய அவர், ‘அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவர்கள் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ, பக்கத்து வீட்டார்களோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, சுகாதார்த்துறைக்கோ, காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம். தனிமைப்படுத்துதல் என்பது, உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப்போல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், அரசுக்கு முக்கியம்.இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொறுப்பான குடிமக்களாக இருந்து, நம்மையும், சமுதாயத்தைக் காப்போம்.அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரும்போது ஒருவருக்கு ஒருவர் கட்டாயம், 3 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளி என்ற கோட்பாட்டைக் கடைபிடிப்போம். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்குள் நுழையும் முன்பு, நம் பார்ம்பரிய வழக்கப்படி, கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கள். கை குலுக்குவதைத் தவிர்த்து, கை கூப்பி வணக்கம் சொல்லவும். விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...