சனாதன தர்மமும் கொரோனாவும் – அர்ஜூன் சம்பத்..!

சமூக நலன்

சனாதன தர்மமும் கொரோனாவும் – அர்ஜூன் சம்பத்..!

சனாதன தர்மமும் கொரோனாவும் – அர்ஜூன் சம்பத்..!

சனாதன தர்மமும் கொரோனாவும் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:-

இந்துக்களின் பாரம்பரியம், பண்பாடுகளை திரும்பிப்பார்க்கும் உலகத்தினை, நாம் பார்க்கும் வசதிகளுடையதே இன்றைய நவீன கைபேசிகள். இது தான் உண்மைகள் உணரும் யுகம். அறிவாற்றலினால் நம் முன்னோர்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஐநா சொன்னால் தான் உண்மை, இந்து வாழ்வியல் வழிமுறைகள் மூடநம்பிக்கை என்று சொல்பவர் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

இந்து மக்களின் சில வாழ்வியல் வழிமுறைகள்:-

(1) வந்தாரை வரவேற்கும் பண்பாடு எங்கள் இந்துக்களின் பண்பாடு. இருகரம் கூப்பி வந்தனம் செய்தே வரவேற்றனர்.
(2) வாசலில் பசுவின் சாணத்தினால் மெழுகப்பட்ட முற்றத்தில் கோலங்கள் மற்றும் மஞ்சளினால் ஆன பிள்ளையாருடன் அறுகம்புல்.
(3) வாசலில் மஞ்சள் , நிலையில் மாவிலை வேப்பிலை தொங்கிக்கொண்டிருக்கும்.
(4) சாணத்தினால் மெழுகப்பட்ட அடுப்பங்கரை
(5) எலுமிச்சம் பழப்புளி , சாம்பல் தேய்த்த கோப்பையில் தேநீர் மற்றும் சாப்பாடு
(6) கை , கால் , முகம் கழுவிய பின்னர் , விபூதி தரித்து உணவு உண்டனர் எங்கள் முன்னோர்கள்.
(7) ஒரே கோப்பையில் சாப்பிடாமல் வாழையிலை , தாமரையிலை போன்று இலைகளில் விருந்தளித்தார்.
(6) உண்ணும் உணவில் கண்டிப்பாக பருப்பு வைத்தனர். பருப்பில் மஞ்சள் வைத்தனர்.
(7) கடைசியில் ரசத்தினை வைத்தனர் ரசத்தினுள் உள்ளி , மிளகு , மிளகாய் என அள்ளிப்போட்டனர்
(8) பெண்கள் தினசரி மஞ்சள் பூசினர்
(9) அனைவரும் மூன்று குறியுடன் திருநீறு பூசினர்
(10) கோவில் வாசலில் கைகால் கழுவினர்
(11) கோவிலினுள்ளே தீபங்கள் ஏற்றினர்
(12) பூசைகள் தோறும் சங்கொலி , சேமக்கலம் , மேளம் , பறை , மணியென மாறிமாறி முழங்கினார்.
(13) தீபவரிசையில் கடைசியில் வீடுசெல்ல முன்னர் பஞ்சரார்த்தி என்று ஐந்து இடங்களில் கற்பூரம் வைத்து விளாசியெரித்து இருகைகளாலும் தொட்டு வணங்கினர்.
(14) பின்னர் விபூதி தரித்து தீர்த்தம் கொடுத்தனர். தீர்த்தனினுள்ளே திரவியங்களை போட்டனர்.
(15) கோவிலுக்கு சென்று வந்தால் மீண்டும் கைகழுவாமல், முகம் கழுவாமல் அப்படியே இருக்க சொன்னார்கள்.
(16) சாவு விழுந்தால் பறை அடித்தனர்
(17) சுடலை சென்றால் உலக்கையை கடந்து வேப்பிலை உண்டனர்
(18) சாவுவீடு சென்றால் வெளியிலே குளித்தனர் , கிணற்றினைத் தொடாது மற்றவரை அள்ளி ஊத்தச் சொன்னனர். குளித்தபின் திருநீறு பருப்புடன் சாப்பாடும் இட்டனர்.
(19) குழந்தையை எண்ணெய் வைத்து வெய்யிலில் கிடத்தினர்
(20) மல்லித்தண்ணி , தூதுவளை குடிநீர் , இஞ்சி தேநீர் , மிளகுடன் பால் என்றும் துளசி , கர்ப்பூரவள்ளி என்றும் குடித்தனர்.
(21) ஆண்கள் மீசை வளர்த்தனர் , சுவாசத்திற்கு பாதுகாப்பானது.
(22) புற்பாயில் படுத்தெழும்பினர் ,
(23) வேப்பங்குச்சியில் பல்துலக்கினர்
(23) காலைக்கடனை குந்தியிருந்தனர்
(24) சுவாச பயிற்சியென திருமந்திரம் வழி நின்றனர்
(25) மூச்சுவிடாமல் திருமுறை ஓதினர்
(26) ஓம் நமசிவாயவென ஐந்தெழுத்தை ஓதினர்
(27) விபூதி தரித்தே உறக்கத்திற்கு போயினர்
(28) குழல்கொண்டு அடுப்பு ஊதினர்
(29) முற்றத்தில் துளசி , பக்கத்தில் கர்ப்பூரவள்ளி , முன்னாலை வேம்பு , கதவுநிலைகள் வேம்பு , கட்டில் வேம்பு சட்டங்கள் வேம்பு என்று தெரிந்தே வைத்தனர்.
(30) மக்கள் கூடுமிடங்களில் வாழை தோரணம் கட்டினர்.
(31) சாம்ராணி தூபம் ஊதுபத்தி ஏற்றினோம்.
(32) சமுத்திரத்தில் நீராடுவது


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்துக்களின் பண்பாடுகளை அறிய முன்வாருங்கள்.மூடநம்பிக்கை என்று சொல்லவதற்கு உங்களுக்கு அறிவு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் தேடுங்கள். மேற்குலகத்திற்கு தெரியும். வெளியில் காட்டிட வெட்கம் மற்றும் அதனை மருந்தாக்கி விற்க வழிதேடுவார்கள்.
ஆகவே நாங்கள் தான் விழித்தெழ வேண்டும். உலகின் பண்பாடு கொண்ட இந்துக்கள் என்பதை உலகறிய செய்வோம் என கூறியுள்ளார் .

Leave your comments here...