கொரோனா எதிரொலியால் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம்

கொரோனா எதிரொலியால் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு..!!

கொரோனா எதிரொலியால் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு..!!

கொரோ வைரஸ் தொற்று பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் வரும் 31ந்தேதி வரை உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பற்றி வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை வரும் 31ந்தேதி வரை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைகாலப் பயிற்சி வகுப்புகளை வரும் 31ந்தேதி வரை நடத்தக்கூடாது.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் மக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். ரெயில் நிலையங்களில் பயணிகளை தெர்மல் ஸ்கேனிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...