பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமான சென்னை ஐஐடி பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடை செய்யவேண்டும் – அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…!!!

தமிழகம்

பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமான சென்னை ஐஐடி பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடை செய்யவேண்டும் – அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…!!!

பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமான சென்னை ஐஐடி  பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடை செய்யவேண்டும் – அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…!!!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பயிலும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமான அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்றும் – பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட கேரளத்தை சேர்ந்த மாணவர்கள் ஜஸ்டின் ஜோசப், ஜெயகிருஷ்ணன் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐஐடி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:- சென்னை ஐ.ஐ.டி உயர்கல்வி வளாகத்தில் தொடர் வன்முறையில் ஈடுபடும் இடதுசாரி சிந்தனையுள்ள அம்பேக்தகர் பெரியார் வாசகர் வட்டம் அமைப்பு – உயர்கல்வி வளாகத்தில் கல்விச்சூழலை கெடுத்து வருகிறது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்


மாட்டிறைச்சி திருவிழா C.A.A., எதிர்ப்பு போராட்டம் இந்திய அரசியல் சாஸன அவமதிப்பு நிகழ்ச்சிகள், நக்சல் பயங்கரவாதிகளுக்கு (பீம் கொரேகவுன்) குற்றவாலிக்கு கல்வி வளாகத்தில் அடைக்கலம் கொடுத்தது கிஸ் ஆப் லவ் புரோகிராம் நடத்துதல், பாத்திமா தற்கொலை நிகழ்வை வைத்து கலகம் செய்வது, சக மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வது பிரதமர் நரேந்திரமோடி மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அவமதிப்பது உள்ளிட்ட தொடர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுக்கு கம்யூனிஸ்ட் நக்சல் திராவிட இயக்கங்களின் பின்னணி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு இவர்களோடு சேர்ந்து போராடிய சக மாணவி அல்சியாஜோஸ் தன் முகநூலில், ஜஸ்டின் ஜோசின் சதி வேலைக்கு ஒத்துழைப்பு நல்க மறுத்து ஜஸ்டின் ஜோசப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் ஜஸ்டின் ஜோசப் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து அல்சியாஜோசை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் எடுக்க முயன்று சிக்கிக்கொண்டனர். மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு அல்சியா ஜோசை உள்ளக்கியுள்ளனர் இது தொடர்பாக கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஜஸ்டின் ஜோஸ், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட அம்பேத்கர் பெரியா வாசகர் வட்ட அமைப்பைச் மாணவர்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. உறுதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரி மற்றும் திராவிடர் கழக ஊடகங்கள் இது குறித்து வாய்மூடி மௌனமாக உள்ளனர். ஐ.ஐ.டி நிர்வாகம் இடதுசாரி நக்சல் இயக்கங்களுக்கு பயந்து ஒதுங்குகிறது. அனைத்துத் தரப்பினரும் இது குறித்து மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஐ.ஐ.டி. வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் அமைப்பை தடைசெய்ய வேண்டும். பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட மேற்படி நபர்களை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், IIT வளாகத்தில் கல்விச்சூழலை பாதுகாக்க வேண்டும், சென்னை IIT க்கு அம்பேத்கர் பெயரை நிலை நட்டிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.


Leave your comments here...