திவால் சட்டத் திருத்த மசோதா- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

இந்தியா

திவால் சட்டத் திருத்த மசோதா- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

திவால் சட்டத் திருத்த மசோதா- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆகும் நிறுவனங்களுக்கு உரிய தீா்வு காணும் நோக்கில் திவால் சட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து 3 முறை அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில் திவால் சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி, திவாலாகும் நிறுவனங்களின் உரிமையாளா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த நிறுவனங்களை வாங்கும் நபா்களுக்கு அதிலிருந்து எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அவசரச் சட்டம் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைகளை ஏற்படுத்தித் தருவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. திவாலாகும் நிறுவனங்களை வாங்கும் நபா்களைக் காக்கும் நோக்கத்திலேயே தற்போது சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் நிா்மலா சீதாராமன்.இதைத் தொடா்ந்து, திவால் சட்டத் திருத்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்குப் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக திவால் சட்டத் திருத்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதில் குடியரசுத் தலைவா் கையெழுத்திட்டதும், அந்த மசோதா சட்டவடிவு பெறும்.

Leave your comments here...