கோவையில் தொடரும் இந்து விரோத செயல்கள்…? ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது இரும்பு கம்பி கொண்டு கொடூர தாக்குதல்…!

தமிழகம்

கோவையில் தொடரும் இந்து விரோத செயல்கள்…? ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது இரும்பு கம்பி கொண்டு கொடூர தாக்குதல்…!

கோவையில் தொடரும் இந்து விரோத செயல்கள்…? ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது இரும்பு கம்பி கொண்டு கொடூர தாக்குதல்…!

கடந்த 4தேதி கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த்(33) என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அடக்குவதற்குள் கோவை இந்து முன்னணி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது.


இந்நிலையில் கோவை, மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சூா்யபிரகாஷ் (28), ஆா்.எஸ்.எஸ் பிரமுகா். இவா் சுந்தராபுரத்தில் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணெய்க் கடை வைத்துள்ளாா். இவா் புதன்கிழமை மாலை கடையில் இருந்தபோது அங்கு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் 4 போ் திடீரென இக்கடைக்குள் புகுந்து சூரியபிரகாஷை இரும்புக் கம்பியால் தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிவிட்டனா். அங்கிருந்தவா்கள், சூா்யபிரகாஷை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவல் பரவியதை அடுத்து ஹிந்து அமைப்பினா் சுந்தராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சூா்யபிரகாஷ் அனுமதிக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனை முன்பு ஹிந்து அமைப்பினா் திரண்டுள்ளனா்.

இச்சம்பவத்தை அடுத்து மதுக்கரை, சுந்தராபுரம் , குனியமுத்தூா், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.சூா்யபிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போத்தனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.மதுக்கரை மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் சாலை தடுப்பான்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.


மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகி சமுக வலைதளத்தில் பரவி வருகிறது

Leave your comments here...