மாசி திருவிழா தேரோட்டம் – திருச்செந்தூரில் கோலாகலம்- வடம் பிடித்து தேர் இழுக்கும் திரளான பக்தர்கள்..!

ஆன்மிகம்

மாசி திருவிழா தேரோட்டம் – திருச்செந்தூரில் கோலாகலம்- வடம் பிடித்து தேர் இழுக்கும் திரளான பக்தர்கள்..!

மாசி திருவிழா தேரோட்டம் – திருச்செந்தூரில் கோலாகலம்-  வடம் பிடித்து தேர் இழுக்கும் திரளான பக்தர்கள்..!

அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசித்திருவிழாவின் 7-ஆம் நாள் சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு பட்டு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8 ஆம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சுவாமி பச்சை சாத்தி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கு வந்திருக்க கூடிய பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Leave your comments here...