சிக்கலில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் – வீட்டில் அதிரடி சோதனை- பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு..!!!

இந்தியா

கடந்த, 2018ம் ஆண்டு ஆகஸ்டில், யெஸ் பேங்கின் தலைமை நிர்வாகியாக பொறுப்பில் இருந்த போது கடன் வழங்குவதில் இருந்த விதிமீறல்கள் நடந்ததாக அடுத்து பதவிக்கு வந்த ரவ்நீத் கில், வங்கியின் நிதி சிக்கல்களை அம்பலப்படுத்தினார். யெஸ் வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது. நிதிச் சிக்கலில் உள்ள யெஸ் பேங்கை எஸ்.பி.ஐ. நிர்வாகம் கையகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதாகவும்; விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்தசூழ்நிலையில் யெஸ் வங்கியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியாக இருந்தவருமான ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave your comments here...