சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளராக திரு வி கே சஞ்ஜீவி பொறுப்பேற்பு
- March 5, 2020
- admin
- : 1373
- BSNL | Chennai
சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளராக திரு. வி.கே.சஞ்ஜீவி 04.03.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவரான இவர், தொலைத் தொடர்புத் துறையில் 33 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவராவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் பல இடங்களில் பணியாற்றிய இவரது சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி 2006 ஆம் ஆண்டு சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பாக சென்னை பிஎஸ்என்எல்-லில் தெற்கு தொலைத்தொடர்பு திட்ட முதன்மைப் பொது மேலாளராகப் பணியாற்றினார். சென்னைக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் கண்ணாடியிழை கேபிள் பதிக்கும் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.சென்னை பிஎஸ்என்எல்-லின் தலைமைப் பொது மேலாளராக இருந்த திரு.பி.சந்தோஷம், 29.02.2020 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு.சஞ்ஜீவி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாக பிஎஸ்என்எல் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Leave your comments here...