“அடல்சௌக் , பாரதமாதா சௌக்”- ஜம்முவின் வரலாற்று சிறப்பு மிக்க இரு சாலைகளுக்கு பெயர் மாற்றம்..!

இந்தியா

“அடல்சௌக் , பாரதமாதா சௌக்”- ஜம்முவின் வரலாற்று சிறப்பு மிக்க இரு சாலைகளுக்கு பெயர் மாற்றம்..!

“அடல்சௌக் , பாரதமாதா சௌக்”-  ஜம்முவின் வரலாற்று  சிறப்பு மிக்க இரு சாலைகளுக்கு  பெயர் மாற்றம்..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் அறிவிப்பு, கடந்த ஆண்டு 2019ம் ஆகஸ்டு 5ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மறுசீரமைப்பு சட்டத்தின்படி, காஷ்மீர் மாநிலம் நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாறியுள்ளது.அங்கு, காவல்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜம்மு நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 75 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43  இடங்களில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் ஜம்மு-வின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சிட்டி சௌக் பெயரினை பாரதமாதா சௌக் (Bharat Mata Chowk) என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை ஜம்மு நகரசபைக் கழகம் நிறைவேற்றியுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர நாட்களில் சிட்டி சௌக்கில் கொடி ஏற்றும் விழாக்கள் நடைபெறும் போது, ​​மக்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிடுவதால், பெயர் மாற்றம் மக்களின் எதிர்ப்பாக பிரதிபலிக்கிறது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி இதுதொடர்பான தீர்மானத்தை நகர சபை நகர்த்தியது, என்றபோதிலும் அது ஒத்திவைக்கப்பட்டது, இதனையடுத்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஜம்முவில் துணை மேயர் கூறியுள்ளார்.


இதேபோல் சாலை சவுக்கிற்கு முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவாக அவர்களின் பெயரை அடல்ஜி சௌக் (Atal Ji Chowk) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நகரின் மையத்தில் உள்ள இந்த சந்திப்பு ஜம்முவின் முக்கிய வணிக மையமாகும். இதன் காரணமாக இப்பகுதி ஜம்முவின் இதயம் எனவும் வர்ணிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அங்குள்ள பெயரில் மாற்றத்தை அறிவிக்க ஜம்மு நகராட்சி ஒரு அடையாள பலகையை இப்பகுதியில் நிறுவியுள்ளார்கள்.


Leave your comments here...